MOBILE CLOUD

தரவுப் பின்சேமிப்பு மற்றும் ஒத்திசைவுக்கான எளிய, பாதுகாப்பான சேவை

HUAWEI Mobile Cloud பயனர்கள் அவர்களது தரவையும் மொபைல் அமைப்புகளையும் வயர்லெஸ் முறையில் காப்புப்பிரதி எடுக்க மற்றும் மீட்டமைக்க, HUAWEI மொபைல் சாதனங்கள் அனைத்திலும் தரவை ஒத்திசைக்க மற்றும் எளிதில் பரிமாற்ற, கிளவுட் இயக்கியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகக் கோப்புகளைச் சேமிக்க மற்றும் அணுக, உதவுகிறது. அக்டோபர் 2017 முதல் EMUI 5.1 மற்றும் EMUI 8.X உள்ள அனைத்துச் சாதனங்களுக்கும் HUAWEI Mobile Cloud-ஐக் கிடைக்கச் செய்வது தொடங்கப்பட்டது.

எவ்வாறு தொடங்குவது

EMUI5.X: Settings > Cloud என்பதைக் கிளிக் செய்து, Enter-ஐத் தொடவும்.

EMUI8.X: Settings > Account centre (TOP) > Cloud என்பதைக் கிளிக் செய்யவும்

* உள்நுழைந்து, HUAWEI Mobile Cloud-ஐ அணுக, உங்களுக்கு ஒரு HUAWEI ID தேவை.

அம்சங்கள்

பல சாதனங்களை ஒத்திசைத்தல்

ஒரே HUAWEI ID-ஐப் பயன்படுத்துகின்ற பல சாதனங்களுக்கு (EMUI 5.1 அல்லது அதற்குப் பிந்தையவை) இடையே தரவைத் தானாகவே ஒத்திசைக்கலாம். உங்கள் தரவை நிர்வகிக்க, மொபைல், டேப்லெட், லேப்டாப் அல்லது பிற சாதனங்களில் Mobile Cloud-இலும் நீங்கள் உள்நுழையலாம். Mobile Cloud-இல் உள்நுழைந்த பிறகு நீங்கள் ஒரு புதிய HUAWEI அல்லது Honor மொபைலை மாற்றினால், பழைய மொபைலில் இருந்து அனைத்துத் தரவு மற்றும் அமைப்பையும் பெறுவீர்கள்.

Cloud காப்புப்பிரதி

Cloud காப்புப்பிரதி மூலம், உங்கள் சாதனம் தானியங்கு காப்புப்பிரதிகளைச் செய்ய விரும்புகிறீர்களா அல்லது கைமுறையான காப்புப்பிரதிகளைச் செய்ய விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். காப்புப்பிரதி எடுக்கப்பட நீங்கள் விரும்பும் தரவைத் தேர்வு செய்யலாம் – இதில் உங்கள் கேலரி, தொடர்புகள், செய்திகள், மெமோக்கள், பதிவுகள், அமைப்புகள், வானிலை, கடிகாரம், கேமரா மற்றும் செயலிகள் போன்ற அனைத்தும் அடங்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் தரவு மட்டுமாக இருக்கலாம்.

* Q3 / 2019-இல் ஆசிய நாடுகளில் கேலரிப் பின்சேமிப்பு கிடைக்கும்.

Cloud கேலரி

கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், திரைப்பிடிப்புகள் மற்றும் திரைப் பதிவுகள் அனைத்தையும் கேலரிலிருந்து தானாகவே Mobile Cloud-க்குக் காப்புப்பிரதி எடுக்கலாம். நீங்கள் கேலரியில் ஏதாவது புகைப்படத்தை நீக்கும்போது, அது “சமீபத்தில் நீக்கியவை” கோப்புறைக்கு நகர்த்தப்படும். நீக்கியதிலிருந்து 30 நாட்களுக்குள் “சமீபத்தில் நீக்கியவை” கோப்புறையிலிருந்து புகைப்படங்களை மீட்டெடுக்கலாம். மொபைலில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கினால், உங்கள் Mobile Cloud-இல் உள்ள தரவும் கூட தானாகவே நீக்கப்படும்.

* Q3 / 2019-இல் ஆசிய நாடுகளில் Cloud கேலரி கிடைக்கும்.

Cloud Portal

பயனர்கள் எந்தவொரு சாதனத்தைப் பயன்படுத்தியும் Cloud Portal (cloud.huawei.com)-இல் உள்ள அவர்களது தரவை அணுகலாம் மற்றும் நிர்வகிக்கலாம். எளிதாகத் தொடர்புகளை ஏற்றுமதி/இறக்குமதி செய்ய, பிரதிகளை ஒன்றிணைக்க, உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அணுக மற்றும் பார்க்க, தரவை நிர்வகிக்க மற்றும் நீக்க Cloud Portal உங்களை அனுமதிக்கும்.

உங்கள் தரவு பாதுகாக்கப்பட்டுள்ளது

அனைத்துத் தரவுகளும் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்க, ஆசியாவிற்குள் ஆசியச் சேவையகங்களில் பிரத்யேகமாகச் சேமிக்கப்படும். பயனர் தனியுரிமையை மனதில் கொண்டே எல்லாச் சேவைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் HUAWEI Mobile Services-க்கு GDPR சான்றளித்துள்ளது).

5GB இலவசம், அதிக சேமிப்பகத்தை வாங்குங்கள்

HUAWEI Mobile Cloud, 26 நாடுகளில் HUAWEI மற்றும் Honor பயனர்களுக்காக 5GB இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும், EMUI 5.1 அல்லது பிந்தைய பதிப்புள்ள சாதனத்தில் இந்தப் பயனர்கள் அதிக சேமிப்பகத்தை வாங்கலாம்: ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ரோமானியா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, யுகே, செர்பியா மற்றும் ஸ்லோவேனியா. தங்கள் HUAWEI ID-ஐப் பயன்படுத்திப் பதிவுசெய்யும் அல்லது உள்நுழையும் பயனர்களுக்கு இலவச கிளவுட் சேமிப்பகம் கிடைக்கும்.

* Q3 / 2019-இல் ஆசிய நாடுகளில் இந்த அம்சம் கிடைக்கும்.

Q: அதிக கிளவுட் சேமிப்பகத்தை யார் வாங்கலாம்?

ஆசிய நாடுகளில் எதிலேனும் தமது HUAWEI ID கணக்குகளைப் பதிவு செய்துள்ள HUAWEI Mobile Cloud பயனர்கள் அதிக கிளவுட் சேமிப்பகத்தை வாங்கலாம். புதிய Cloud பதிப்பு கிடைக்கும்போது, பயனர்கள் தானியங்கிப் புதுப்பிப்பு அறிவிப்பைப் பெறுவார்கள்.

Q3 / 2019-இல் ஆசிய நாடுகளில் அதிக சேமிப்பகத்தை வாங்கும் சாத்தியம் கிடைக்கும்.

Q: எந்தெந்த சாதனங்கள் / EMUI பதிப்புகள் ஆதரிக்கப்படுகின்றன?

HUAWEI Mobile Cloud மற்றும் அதிக சேமிப்பகத்தை வாங்கு அம்சம் ஆனது, EMUI 5.1 அல்லது பிந்தைய பதிப்புள்ள சாதனங்களுக்குக் கிடைக்கிறது. ஆதரிக்கப்படும் நாடுகளில் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ள HUAWEI ID உம் பயனர்களிடம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:

  • Huawei P20 / P20 Pro / P20 Lite
  • Huawei P10 / P10 Plus / P10 Lite
  • Huawei Mate 10 / Mate 10 Lite, Mate 10 Pro
  • Huawei PSMART/ P8 LITE 2017
  • Huawei Y7
  • Y6 PRO 2017/P9 LITE MINI
  • NOVA2
  • Huawei T3 (டேப்லெட்)
  • Honor 10
  • Honor 9
  • Honor 8 Pro
  • Honor 8 Lite 2017
  • Honor 7A மற்றும் 7C
  • HONOR6A

* Huawei Mobile Cloud மற்றும் அதிக சேமிப்பகத்தை வாங்கு ஆகியவை EMUI 5.1 அல்லது பிந்தைய பதிப்புள்ள பிற சாதனங்களையும் ஆதரிக்கின்றன. இங்கு அனைத்தும் பட்டியலிடப்படவில்லை.

* Q3 / 2019-இல் ஆசிய நாடுகளில் அதிக சேமிப்பகத்தை வாங்கும் சாத்தியம் கிடைக்கும்.

எங்கள்அதிகாரப்பூர்வகணக்கைப்பின்பற்றவும்

சமீபத்திய டிரெண்ட்களைப் பற்றி மேலும் அறியவும்